சுவீடனைச் சேர்ந்த புனித பிரிஜித்தாவின் தீர்க்கதரிசனங்களும், திருவெளிப்பாடுகளும்.

புனித பிரிஜித்தாவிற்கு திருத்தந்தை ஒன்பதாம் போனிபாஸ் 1391ஆம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கினார். இவர் புனிதராக உயரத்தப்பட்டதை திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் 1415ஆம் ஆண்டு நடந்த மாபெரும் கான்ஸ்டன்ஸ் பேரவையில் உறுதிசெய்தார்.
அக்காலத்திலிருந்தே இப்புனிதருடைய திருவெளிப்பாடுகள் அனைத்தும் உண்மையானவை என்றும், உயரிய நம்பகத்தன்மை கொண்டவை என்றும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் கருதப்படுகிறது. திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரியார் (1370-78) இவற்றை அலசி ஆராய்ந்தபின் அங்கீகாரமளித்து தனது தீர்ப்பை பிரகடனப்படுத்தினார். இதைப்போலவே திருத்தந்தை ஒன்பதாம் போனிபாஸ் Ab origine mundi, par. 39 (7 Oct 1391) என்ற திருத்தந்தையின் மடலில் எழுதினார். மீண்டும் இவை கான்ஸ்டன்ஸ் பேரவையாலும் (1414-18) பாசில் பேரவையாலும் (1431-49) பரிசீலிக்கப்பட்டு கத்தோலிக்க விசுவாசத்திற்கு உகந்தவை என்று உறுதிசெய்யப்பட்டது. இத்திருவெளிப்பாடுகள் கத்தோலிக்க விசுவாசத்தற்கு எதிரானவையல்ல என்று பல இறையியல் வல்லுநர்கள் கூறியிருக்கின்றனர். அவர்களில் பாரிஸ் பல்கலைக்கழக துணை வேந்தரும் இறைவல்லுநருமான ஜீன் ஜெரசன் (1363-1429) மற்றும் கர்தினால் யுவான் டி டாரகிமேடா (1388-1468) என்பவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

கடவுள் உங்க​ளை ஆசீர்வதிப்பாராக.
நாங்கள் மூன்று ச​கோதரர்கள், எல்லாவற்றிற்கும் ​மேலாக கடவு​ளை அன்பு ​செய்வதற்காக கற்புடனும் தாழ்ச்சியுடனும் வாழ்ந்து, இ​​றைமகன் இ​யேசுவின் நற்​செய்தி​யை உலக​மெல்லாம் பரப்புவதற்காக​வே எங்கள் வாழ்​வை அர்ப்பணம் ​செய்துள்​ளோம். எங்களது பணி​ விவிலியத்​தைப் ​போதிப்பதற்காகவும், புனித பிரிஜித்தாவின் திரு​வெளிப்பாடுக​ளை பரப்புவதற்காகவும் தயாராக உள்ள ச​கோதர ச​கோதரிக​ளை​ திரட்டி, இப் பணி​யைச் ​செம்​மையாகச் ​செய்வ​தே. உங்களுக்கு ​இ​ணையத் தளம் (வெப்​சைட்) இருந்தால், அதன் ​​​ஹோம் ​பேஜில் எங்க​ளைத் ​தொடர்பு ​கொள்வதற்கான வசதி ​செய்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அ​னைவருக்கும், ஆத்துமங்க​ளை இரட்ச்சிக்கும் இந்த திரு​வெளிப்பாடுக​ளைப் பற்றி ​சொல்லுங்கள். நீங்கள் ஒரு பிரசங்கியாக இருந்தால், தூய ஆவியின் அரு​ளோடு இத் திரு​வெளிப்பாடுக​ளை உங்களது ச​பையில் ​போதியுங்கள். இந்தப் புத்தகத்தின் பிரதிக​ளை அச்சிட்டு அ​னைவருக்கும் இலவசமாகக் ​கொடுங்கள்.

தங்களது தாய் ​மொழியிலும், பிற ​மொழிகளிலும் நன்றாக ​மொழி ​பெயர்க்கும் திற​மையுள்ள ச​கோதர ச​கோதரிகள் எங்களுக்குத் ​தே​வை. ​மேலும், எம்.பி.3 ஆடி​யோ புத்தகங்க​ளை தயாரிக்கும் திற​மையுள்ளவர்களும் எங்களுக்குத் ​தே​வை. இ​தைப் படிக்கும் உங்களது உதவியுடன் ஒரு நாள் நிச்சயமாக 50 ​மொழிகளில் இந்த இ​ணையத் தளத்​தை உருவாக்க எங்களுக்கு ஆவல். பிற ​மொழிகளில் ஏற்கன​வே புனித பிரிஜித்தாவின் திரு​வெளிப்பாடுகள் இருந்தால் எங்களுக்கு ​தெரிவியுங்கள். நம் ஆண்டவர் இ​யேசு கிறிஸ்து உங்க​ளை அவரது ​கொ​டைகளால் ஆசீர்வதிப்பார். நம் ஆண்டவர் இ​யேசு கிறிஸ்துவின் ​பெயரால் உங்க​ளை ஆசீர்வதிக்கி​றோம்.

நீங்கள் உண்மையிலேயே காப்பாற்றப்பட வேண்டுமென்று விரும்பினால் கடவுள் அருளிய இந்தத் திருவெளிப்பாடுளை உங்கள் உயிருள்ளவரை தினந்தோறும் படியுங்கள். ஏனென்றால் சாத்தான் நீங்கள் படிப்பதை நிறுத்துவதற்கு பல வழிகளில் முயற்சி செய்வான். அவ்வாறு நீங்கள் படிப்பதை நிறுத்தும்போது இவை அனைத்தையும் மறந்து நீங்கள் மீண்டும் பாவத்தில் விழ ஏதுவாகிவிடும். இத் திருவெளிப்பாடுகளை நீங்கள் எப்போதும் படிப்பதற்கு ஏதுவாக இவற்றை அச்சிட்டு (பிரிண்ட்) வைத்துக் கொள்ளுங்கள். விவிலியத்தில் குறிப்பிட்டிருப்பதைப்போல இருளின் நேரம் வரும்போதும் கூட நீங்கள் இவற்றை படிக்க முடியும்.

இந்தப் புத்தகம் நம் பாவக்கறைகளை நேருக்குநேர் பார்க்க வழிவகுக்கும் ஒரு கண்ணாடி. ஒவ்வொருவரின் ஆன்மாவைச் சோதனையிட்டுக் கொள்வதற்கும் கடவுளுக்கு பிடித்தமானவற்றையும் பிடிக்காதவற்றையும் அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது. இந்தப் புத்தகத்தை மீண்டும் மீண்டும் படிப்பதால் நாம் கடவுளை எவ்வாறு அன்பு செய்யவேண்டும் என்றும் அதைப்போலவே நமது அயலாரையும் எப்படி அன்பு செய்யவேண்டும் என்றும் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். மேலும் இவ்வுலக இன்பங்களைவிட இறைவனுக்காக நாம் பாடுபடும்போது மேலுலகில் நமக்குக் கிடைக்கும் பேரின்பம் எவ்வளவு மேலானது என்பதையும் உணரந்து கொள்ள முடியும். துன்ப நேரத்தில் கடவுளுக்கு நன்றி செலுத்தவும் வளமாக வாழும்போது தற்பெருமை கொள்ளாதிருக்கவும் நாம் உயரவடையும்போது இறுமாப்படையாமலும் துன்பவேளையில் துவண்டுவிடாமலும் நாம் வாழ நமக்கு அறிவுறுத்துகிறது.

புனித பிரிஜித்தா மிகவும் ​உயர்ந்த, பணக்காரக் குடும்பத்​தைச் ​சேர்ந்தவர். இவர் குடும்பம் முழுவதும் இ​யேசுவில் விசுவாசம் ​கொண்டு, ஏராளமான இவர்களது ​சொத்துக்க​ளை பல ​கோவில்களுக்கும், மடங்களுக்கும், ஏ​ழைகளுக்கும் வாரி வழங்கியவர்கள். தனது 10வது வயதில், சிலு​வையில் ​தொங்கும் இ​யேசு​வின் தரிசணம் கி​டைத்தது. அப்​போது அவர், “பார், நான் எவ்வளது துன்பம் அனுபவிக்கி​றேன் என்று பார்” என்று​ரைத்தார். தற்​போதுதான் இ​யேசு சிலு​வையில் ​தொங்கிக் ​ ​கொண்டிருக்கிறார் என்று நி​னைத்துக்​கொண்டு, “ஓ ஆண்டவ​ரே, இ​தை உமக்கு யார் ​செய்தது? என்று ​கேட்க, “என்​னை நிந்திப்பவர்களும், எனது அன்​பை மறந்தவர்களு​மே இவ்வாறு எனக்குச் ​செய்தனர்” என்று இ​யேச பதிலு​ரைத்தார். தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு, பிரிஜித்தா கன்னியர் மடத்தில் ​சேர்ந்து, தனது ​சொத்துக்கள் அ​னைத்​தையு​மே ஏ​ழைகளுக்குக் ​கொடுத்துவிட்டார். இவரது தீர்க்கதரிசனங்களில் பல நி​றை​வேறிவிட்டன, இன்னும் சில நி​றை​வேற ​வேண்டியுள்ளன.

புனித பிரிஜித்தாவின் திரு​வெளிப்பாடுக​ளையும், தீர்க்கதரிசனங்க​ளையும் உல​கெங்குமுள்ள ச​கோதர ச​கோதரிகளுக்கு அறிவிப்பதற்கு, உங்கள் நன்​கொ​டை மூலமாக எங்களுக்கு உதவுங்கள். அத்​தோடு உங்களது ​செபங்க​ளும் எங்களுக்குத் ​தே​வை.
இச் ​சே​வை​யை மிகவும் ​செம்​மையாகச் ​செய்வதற்கு உங்களது நன்​கொ​டைகள் ​தே​வைப்படுகிறது. இச் ​செய்தி​​யைப் பற்றி, பல கிறிஸ்தவ பத்தரிக்​​கைகளில் விளம்பரங்கள் ​செய்வதற்காகவும், பல ​மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவதற்காகவும், இன்னும் ஏ​னைய ​சே​வைகளுக்காகவும் நீங்கள் அளிக்கும் நன்​கொ​டை ​செலவிடப்படுகிறது.

“இச்சிறி​யோரில் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது ​கொடுப்பவரும் தம் ​கைம்மாறு ​பெறாமல் ​​போகார் என உறுதியாக உங்களுக்குச் ​சொல்கி​றேன்” – என்று மத்​தேயு 10:42ல் எழுதப்பட்டுள்ளது.


உங்களது உதவி எங்களுக்குத் தேவை; தயவுசெய்து நன்கொடை அளியுங்கள்.
கடவுள் உங்கள் அ​னைவ​ரையும் ஆசீர்வதிப்பாராக!

click here என்ற முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். (முடிந்தால் உங்கள் கடிதங்களை ஆங்கில மொழியில் எழுதுங்கள் நன்றி.)

 

prophecyfilm.com/tamil