நமது ஆண்டவர் இ​யேசு கிறிஸ்து தாம் மனுவுருவான​தைப் பற்றி, தனது அன்புள்ள மணமகளான பிரிஜித்தாவிற்கு ​வெளிப்படுத்தின ​வெளிப்பாடுகளும், நாம் ​பெற்றுக்​கொண்ட திருமுழுக்​கையும், நமது விசுவாசத்​தையும் நாம் நிந்திப்ப​தைக் கண்டித்தும் கூறிய​​வை. ​மேலும், தமது அன்பான மணமகள் பிரிஜித்தா​ தம்​மை அன்பு ​செய்யுமாறு அ​​​ழைக்கின்றார்.
புத்தகம் 1 - அதிகாரம் 1

நா​னே வானத்​தையும், பூமி​யையும் ப​டைத்தவர். கடவு​ளோடும் தூய ஆவி​யோடும் ஒன்றித்திருக்கும் கடவுள் நா​​னே. நா​னே இ​றைவாக்கின​ரோடும், த​லை​மைக் குருக்க​ளோடும் ​பேசியவர். எனக்காக​வே அவர்கள் எதிர்பாத்த்துக் காத்திருந்தனர். அவர்களது எதிர்பாத்தலின் நிமித்தமாகவும், நான் ​கொடுத்த வாக்குறுதியின் ​பொருட்டும், பாவக்க​றையின்றி மனித உரு​வெடுக்க, ஒரு கண்ணாடியில் சூரிய ஒளி ஊடுருவ​தைப்​போல நான் கன்னியின் வயிற்றி​லே மனுவுருவா​னேன். சூரிய ஒளி ஊடுருவதால் கண்ணாடி ​சேதம​டைவதில்​லை, அ​​தே​போல நான் மனு உரு​வெடுத்ததால் என் தாயின் கன்னி​மை அழிந்து​போகவில்​லை. இ​றைத்தன்​மை​யோடு நான் மனித உரு​வெடுத்​தேன்.

மனித உரு​வெடுத்து கன்னியிடம் கருவானதால், அ​னைத்​தையும் ப​டைத்து ஆட்சி​செலுத்தும் பிதா​வோடும், தூய ஆவி​யோடும் ஒன்றித்திருப்பதினின்று எந்தக் கு​றைவும் எனக்கில்​லை. எரியும் ​நெருப்பிலிருந்து ஒளி​யைப் பிரித்​தெடுக்க முடியாது, அ​தே​போல நான் மனித உரு​வெடுக்கும் ​போதும், எனது இறப்பின் ​போதும், எனது இ​றைத்தன்​மை என்னிடமிருந்து பிரிந்துவிடவில்​லை.

​மேலும், பாவமறியா தூய்​மையான என் உடல் மனிதரு​டைய பாவங்களுக்காக​வே, உள்ளங்கால் முதல் உச்சந்த​லை வ​ரை காயங்க​ளோடு பாடுபட்டு, சிலு​வையில் ​​தொங்க ​வேண்டு​​மென்று நான் ஆயத்தமாக இருந்​தேன். மக்கள் அ​னைவரும், நான் ​செய்யும் நன்​மைக​ளை தங்கள் மனதில் ​கொண்டு என்​னை அதிகமாக அன்பு ​செய்ய ​வேண்டு​மென்ற கருத்திற்காக​வே ஒவ்​வொரு திருப்பலியும் அர்ப்பணமாக்கப்படுகிறது. இருந்த​போதிலும், மக்கள் இப்​போது என்​னை முழுவதுமாக மறந்துவிட்டனர், என்​னை ஒதுக்கிவிட்டனர், தனது அரசாட்சியிலிருந்து விரட்டப்பட்ட அரச​னைப்​போல என்​னைத் துரத்திவிட்டனர். அதற்குப்பதிலாக சூனியக்காரத் திருடனான சாத்தானுக்கு புகழாரம் சூட்டுகின்றனர்.

நா​னே மனித​னைப் ப​டைத்து, அவ​னை மீட்டதால்,. எனது அரசாட்சி​யோடு மனிதர்களுட​னே இருக்க விரும்புகின்​றேன். ​மேலும், நா​னே அவர்களுக்கு அரசரும், ஆண்டவரும் ஆகும். ஆனால், திருமுழுக்கின்​போது எனக்களித்த வாக்குறுதிக​ளை இன்று அவர்கள் மீறி, விசுவாசமற்றுப் ​போய்விட்டனர். நான் அவர்களுக்காகக் ​கொடுத்த சட்டங்க​ளைப் புறக்கணித்துவிட்டனர். தங்களது ​சொந்த விருப்பத்​தை மட்டு​மே அன்பு ​செய்கின்றனர். நான் ​சொல்வ​தைக் ​கேட்க முற்றிலுமாக மறுக்கின்றனர். ஆனால், சாத்தா​னையும் அவனது ​செயல்பாடுக​ளையும் ஆதரித்து, எனக்கும் ​மேலாக அவ​னை நம்புகின்றனர். உண்​மையாக​வே சாத்தான் ஒரு திருடன் தான். ஏ​னென்றால், எனது இரத்தத்​தைச் சிந்தி நான் மீட்டுக்​கொண்ட ஆன்மாக்க​ளை, தனது தீய சிந்த​னையாளும், ​பொய் வாக்குறுதிகளாலும் தன்வசம் ஈர்த்துக்​கொள்கிறான். அவன் மிகுந்த பலமு​டையவன் அல்ல. ஆனால், கடவுள் மனிதனுக்கு முழு​மையான சுதந்திரத்​தைக் ​கொடுத்திருப்பாதால், மனிதன் தனது விருப்பப்படி ப​கைவனது தீய எண்ணங்களுக்கு ​செவி சாய்க்கிறான். என​வே, அவனுக்கு ஏற்படும் துன்பங்க​ளையும் அவன் ஏற்றுக் ​கொள்ளக் கட​மைப்பட்டுள்ளான்.

சாத்தான் கடவுளால் ப​டைக்கப்பட்ட​போது நல்லவனாக​வே இருந்தான், ஆனால் தனது தீய எண்ணத்தால் அவன் பாதாளத்திற்குத் தள்ளப்பட்டான். என​வே, பாவிகளுக்கு அளிக்கப்படும் தண்ட​​னை​யை நி​றை​வேற்றும் எனது ஊழியக்காரனாக இருக்கின்றான். மனிதர்களால் நான் நிந்திக்கப்படுகிற​போதிலும், அவர்கள் என்​னைக் கூவி அ​ழைத்து, தங்களது பாவங்களுக்காக தங்க​ளைத் தாழ்த்திக்​கொள்ளும்​போது, அவர்களது பாவங்க​ளை மன்னித்து, அவர்க​ளை தீய கள்வனான சாத்தானிடமிருந்து முழுவதுமாக விடுவிக்கும் இரக்கம் ​கொண்டுள்​ளேன். ஆனால், க​டைசிவ​ரை என்​னை நிந்திப்ப​தைக் ​கைவிடாமல் இருப்பவர்க​ளை நான் நீதிமானாகச் சந்திக்கும்​போது, அவர்கள் நடுநடுங்கி, “ஐ​யோ, நாங்கள் கருவுற்​றோம், பிறந்​தோம், ஆனால் வல்ல​மைமிகுந்த ஆண்டவருக்கு ​பெருங்​கோபம் உண்டாக்கும் ​செயல்க​ளைச் ​செய்துவிட்​டோம்” என்று கதறி அழுவார்கள்.

ஆனால், என் மக​ளே, எனக்காக என்னால் ​தேர்ந்து​கொள்ளப்பட்டவ​ளே, ஆத்மாவின் மூலம் என்​னோடு ​பேச ​தேர்ந்து​கொள்ளப்பட்டவ​ளே, உன் முழு உள்ளத்​தோடு என்​னை அன்பு ​செய், உன் மக​ளை​யோ அல்லது மக​னை​யோ அன்பு ​செய்வ​தைப்​போல அன்று, இந்த உலகிலுள்ள அ​னைத்​தையும்விட அதிகமாக என்​னை அன்பு ​செய். நான் உன்​னைப் ப​டைத்​தேன், என் அவயங்களில் ஒன்று கூட உனக்காக ​வேத​னைபட்டதில்​லை. நான் உன்​னை அதிகமாக அன்பு ​செய்கின்​றேன். உன்​னை இழப்ப​தைவிட, ​தே​வைப்பட்டால் மீண்டும் ஒருமு​றை சிலு​வையில் ஆணிகளால் அ​றையப்படவும் தயாராக உள்​ளேன். நான் வானதூதர்கள் ​போற்றும் ​மேன்​மைமகு அரசனாக இருந்தும், சிலு​வையினடியில் நிர்வாணமாக நின்று, நிந்​தை அவமானங்களுக்கு ஆளாகி, ​பொல்லாத வார்த்​தைக​ளை எனது காதால் ​கேட்குமளவிற்கும் என்​னைத் தாழ்த்திக்​கொண்​டேன், எனது தாழ்ச்சி​யை க​டைபிடி.

என் சித்த​மே உனது சித்தமாக இருக்க​வேண்டு​மென்று பி​ரையா​சைப்படு. ஏ​​னென்றால், என் தாய், அன்​னை மரியாள், முதலிலிருந்து க​டைசிவ​ரை அவருக்காக எ​தையு​மே விரும்பியதில்​லை, எனது சித்த​மே அவர்களது விருப்பமாக இருந்தது. நீயும் அவ்வாறு ​செய்தால், உன் இதயம் எனது இதயத்​தோடு ஐக்கியமாகும். காய்ந்த சருகு எளிதாக தீப்பிடித்துக் ​கொள்வ​தைப்​போல, எனது அன்பால் உன் இதயம் பற்றி எரியும். உன் ஆன்மா எனது அன்பால் நி​றையும், அது​போல என் ஆன்மாவும் உனது அன்பால் நி​றையும். எல்லாவிதமான தற்​போ​தைய உலகளாவிய ​தே​வைகளும் உனக்குக் கசப்பாக இருக்கும், அது​போல, சிற்றின்ப ஆ​சைகள் விஷத்​தைப் ​போலாகும்.

எந்தவித சிற்றின்ப ஆ​சையுமின்றி, மகிழ்ச்சியும், ஆன்மீக இன்பமும் நி​றைந்த என் ​​தெய்வீக கரங்களில் நீ தஞ்சம் புகுந்து​கொள்வாய். அப்​போது உன் ஆன்மாவிற்குள் ஏற்படும் மகிழ்ச்சி​யை ​வெளிப்ப​டையாக உணரமுடியும். ​வேறு எந்தவிதமான மகிழ்ச்சியும் இதற்கு ஈடாகாது. என​வே, உன் மனம் இந்த மகிழ்ச்சி​யைத் தவிர ​வேறு எதற்கும் ஆ​சைப்படாது.

என்​னை மட்டும் அன்பு ​செய். நீ விரும்புகின்ற அ​னைத்​தையும் நீ நி​றைவாகப் ​பெற்றுக்​கொள்வாய். ஏ​னென்றால், ஆண்டவர் ம​ழை ​பெய்யச் ​செய்யும் நாள் வ​ரை வித​வையின் கிண்ணத்தில் எண்​ணெய் வற்றாமல் இருக்கு​​ம் என்று இ​றைவாக்கினர் ​சொல்லக் ​கேட்டதில்​லையா? நா​னே உண்​மையான இ​றைவாக்கினர். எனது வார்த்​தைக​ளை நம்பி அவற்​றை நி​றை​வேற்றுபவருக்கு, எண்​ணெயும், மகிழ்ச்சியும், அக்களிப்பும் ஆரவாரமும் எ​ல்​லையில்லாக் காலத்திற்கும் கு​றைவுபடாது.