கிறிஸ்து தான் எவ்வாறு தனது முழு விருப்பத்தோடு தனது பகைவர்களிடம் சிலுவைச் சாவிற்கு தன்னையே முழுவதுமாகக் கையளித்தார் என்பதையும் அவருடைய இனிமையான பாடுகளின் நிமித்தமாவது நமது உடலை தவறாகப் பயன்படுத்துவதை நாம் கட்டுப்படுத்தவேண்டும் என்றும் கூறுகிறார்.
புத்தகம் 1 - அத்தியாயம் 11

நானே விண்ணையும் மண்ணையும் படைத்தேன்.  எனது உண்மையான உடல் உன்னத பலியாக பலிபீடத்தில் ஒப்புக்கொடுக்கப்படுகிறது.  என்னை உன் முழு இதயத்தோடு அன்பு செய் ஏனென்றால் நான் உன்னை அன்பு செய்து உனக்காகவே எனது பகைவர்களின் கைகளில் என்னை முழுமையாக சிலுவைச் சாவிற்கு கையளித்தேன். என் தாய்க்கும் நண்பர்களுக்கும் துயரத்தைக் கொடுத்தேன்.  எனக்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த ஈட்டியையும் ஆணிகளையும் மற்ற அனைத்து ஆயுதங்களையும் பார்த்தவுடன் என் உள்ளம் துயரத்தின் உச்சத்தில் ஆழ்ந்தது.  முள் முடி சூட்டப்பட்ட எனது தலையிலிருந்து உடல் முழுவதும் இரத்தம் வழிந்தோடியபோது எனது பகைவர்கள் என் இதயத்தை பிடிங்கியிருந்தால்கூட  அவர்களுக்கு அதைக் கையளித்திருப்பேன். ஏனென்றால் உன்னை நான் இழப்பதைவிட என் இதயத்தை அவர்கள் காயப்படுத்தவும் கையளித்திருப்பேன்.  எனவே நீ என்னை உன் முழு உள்ளத்தோடு அன்பு செய்யாவிடில் அது உன் நன்றிகெட்ட நிலையைக் குறிக்கும்.

உனக்காக எனது தலை சிலுவையில் கட்டித் தொங்கவிடப்பட்டதுபோல நீயும் தாழ்ச்சிக்குத் தலை வணங்கவேண்டும். எனது கண்கள் இரத்தத்தாலும் கண்ணீராலும் மறைக்கப்பட்டதுபோல உனது கண்களும் உனக்கு மகிழ்ச்சி தருவதிலிருந்து விலகி இருக்கவேண்டும்.  எனது காதுகள் இரத்தம் நிறைந்து தீய பொல்லாத வார்த்தைகளைக் கேட்டது எனவே இவ்வாறான தீய பொல்லாத பேச்சுக்களுக்கு நீ இடமளிக்கக்கூடாது.  நான் குடிப்பதற்காக எனது வாயில் இனிப்பிற்குப் பதிலாக கசப்பான காடி கொடுக்கப்பட்டதுபோல உனது வாய் தீயதை அகற்றி நல்லவற்றை மட்டுமே பேச வேண்டும். என் கைகளை ஆணி அறைய நான் விரித்துக்கொடுத்ததுபோல் நீயும் உனது கைகளை (பணிகளை) ஏழைகளுக்காகவும் எனது திருச்சட்டங்களை கடைபிடிப்பதற்காகவும் விரித்துக்கொடு.   என்மீது நீ கொண்டுள்ள அன்பினால் உனது பாதங்கள் என்னை நோக்கி வரட்டும். எனது பாதங்கள் சிலுவையில் அறையப்பட்டதுபோல் உனது பாதங்களால் காம இச்சைகளை நசுக்கிவிடு.  அப்படி நீ செய்தால் நான் சிலுவையில் துடித்ததைப்போல உனது அங்கங்கள் யாவும் எனக்கு கீழப்படிவதற்காக துடிக்கட்டும்.    நான் உனக்கு அதிகமான அருளை வழங்கியிருப்பதால் மற்றவர்களைவிட நீ அதிக சேவைகள் செய்யவேண்டும்.