மூன்று பேய்களைத் தனக்குள் கொண்டிருந்த தனது பகைவனைப் பற்றியும் அவனுக்கு கொடுக்கப்படும் தீர்ப்பைப்பற்றியும் கிறிஸ்து கூறுகிறார். |
புத்தகம் 1 - அத்தியாயம் 13 |
ஒருவன் தன்னோடு மூன்று பேய்களைக் கொண்டிருந்தான். ஒரு பேய் அவனுடைய பாலுறுப்புகளிலும் இரண்டாவது அவனுடைய இதயத்திலும் மூன்றாவது அவனுடைய வாயிலும் குடியிருந்தது. முதலாமவன் தனது குதிங்கால் வரையில் நீரை வார்த்துவிட்ட கப்பலோட்டியைப் போன்றவன். அப்படிச் செய்வதால் நீரானது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கப்பல் முழுவதும் நிரம்பும். பிறகு அங்கு வெள்ளப்பெருக்கெடுத்து அந்த கப்பல் கடலில் மூழ்கிவிடும். இங்கே கப்பலானது அவனது உடலையும், நீர் பெறுகுவதைப்போல காம இச்சையானது அவனுக்குள் குடியிருக்கும் பேயால் புயலைப்போல தூண்டிவிடப்படுவதையும் குறிக்கிறது. காம இச்சையானது அவனது குதிங்கால் வரை நுழைந்து பின் அவனது கெட்ட சிந்தனைகளால் மட்டற்ற மகிழ்ச்சி தரும் ஒன்றாக மாறுகிறது. அவற்றைக் எதிர்கொள்ள அவன் தவ முயற்சிகளை மேற்கொள்ளாததாலும், சுத்தபோசனம் செய்து அவற்றை கட்டுப்படுத்தத் தவறுவதாலும் நீர் பெறுகுவதைப்போல அவனது காம இச்சையானது நாளுக்கு நாள் அதிகரித்து அவனது உள்ளத்தைப் பாதிக்கிறது. நீர் பெருக்கெடுத்து அந்தக் கப்பல் மூழ்குவதைப்போல காமத்தில் மூழ்கி மீட்பு என்னும் துறைமுகத்தை அவன் அடைய முடிவதில்லை.
|
விரிவுரை |
திருச்சபையால் விலக்கிவைக்கப்பட்ட ஒருவரது இறுதிச் சடங்கிற்கான செபத்தை குருவானவர் சொல்லிக்கொண்டிருந்த வேளையில் பிரிஜித்தம்மாள் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, “இந்த குரு தனது அதிகாரத்தைக்கொண்டு இந்த மனிதரை அடக்கம் செய்தார். இந்த அடக்கத்திற்குப்பின் இக் குருவானவர் அடக்கம் செய்யப்படுவார் என்பது நிச்சயம். ஏனென்றால் பாரபட்சம் பார்க்கக்கூடாது, தவறிழைத்த பணக்காரர்களுக்கு பெருமை சாற்றக் கூடாது என்று கற்பித்த பிதாவிற்கு எதிராக பாவம் செய்துள்ளார் என்று கூறக்கேட்டார்.
"அழிந்துபோகக்கூடிய சிறிய இலாபத்திற்காக இந்த குருவானவர் தகுதியற்ற ஒரு மனிதரை பெருமைப்படுத்தி, தகுதியுள்ளவர்களுக்கு மத்தியில் அடக்கம் செய்துள்ளார். இப்படி இவர் செய்திருக்கக்கூடாது. தீயவனை நல்லவருக்கு பக்கத்தில் புதைத்து உண்மையும், நன்மையுமான எனது ஆன்மாவிற்கு எதிராக பாவம் செய்துள்ளார். "என்னை மறுதலித்தவர்களை இறுதி நாளில் நானும் மறுதலிப்பேன்" என்று சொன்னதும் நான் தானே. இவர் எனது திருச்சபையும், திருச்சபைத் தலைவரும் விலக்கிவைத்த ஒருவரை பெருமைப்படுத்தியுள்ளார்" என்று இயேசு கூறினார். தன்னைப்பற்றி இயேசு இவ்வாறு கூறியதைக் கேள்வியுற்ற குருவானவர் மிகவும் மனம் வருந்தி, நான்காம் நாள் மறித்தார். |