தனக்கு ​​வெளிப்படுத்தப்பட்டயாவும் தீ​யோனிடமிருந்து வருகிறதா அல்லது ​வேறு எங்கிருந்து வருகிறது என்ற கவ​லை ​கொள்ள​வேண்டா​மென்று நமது ஆண்டவராகிய இ​யேசு கிறிஸ்து பிரிஜித்தாவிற்குக் கூறிய​வை. ​மேலும் நன்​மை தீ​மைக​ளை எவ்வாறு சரிவரப் புரிந்து​கொள்வது என்றும் விளக்குகிறார்.
புத்தகம் 1 - அதிகாரம் 4

நா​னே உன்​னைப் ப​டைத்தவர், உனக்கு மீட்பு அளித்தவர். ஏன் எனது வார்த்​தைகளின் ​மேல் அச்சம் ​கொண்டாய்? இவ்வார்த்​தைகள் எங்கிருந்து வருகின்றன? நல்ல ஆவியிடமிருந்தா அல்லது தீய ஆவியிடமிருந்தா, என்று எண்ணி கலங்குவது ஏன்? நான் கூறும் வார்த்​தைகள் உனது மனச்சாட்சி ஏற்றுக்​கொள்ளாத அளவிற்கு இருந்தனவா? பதில் ​சொல்! காரணமில்லாமல் உன்​னை நான் எ​தையும் ​செய்யுமாறு கட்ட​ளையிட்​டேனா?

இதற்கு மணமகளின் பதில் – “இல்​லை ஆண்டவ​ரே, அ​வை அ​னைத்தும் உண்​மையான​வை, நான் தான் தவறாகப் புரிந்து​கொண்​டேன்”. அதற்கு மணமகனாகிய இ​யேசு – “மூன்று ​செயல்க​ளைச் ​செய்யுமாறு நான் உனக்கு கட்ட​ளையிட்​டேன். அதிலிருந்து இந்த வார்த்​தைகள் நல்வரிடமிருந்து வருவன என்றும், நற்குணம் ​பொருந்திய​வை என்றும் உணர்ந்து ​கொள். உன்​னைப் ப​டைத்து, உனக்கு ​வேண்டிய​வை அ​னைத்​தையும் ​கொடுத்த கடவு​ளை நீ ​போற்ற ​வேண்டும் என்று கட்ட​ளையிட்​டேன். மற்ற அ​னைத்​தையும்விட என்​னை அதிகமாக ​போற்ற​வேண்டும் என்று உனது மனச்சாட்சியும் ​சொல்கறதல்லவா?

இரண்டாவதாக, எ​ன்னையன்றி எதுவும் ப​டைக்கப்படவில்​லை, ​மேலும் என்​னையன்றி எ​தையும் உருவாக்கிட இயலாது என்ற சத்தியத்தின்மீது உண்​மையான விசுவாசம் ​கொள்ளுமாறு கட்ட​ளையிட்​டேன். ​மேலும், உலகக் காரியங்களின் மீதுள்ள ஆ​சை அள​வேடு இருக்க​வேண்டும் என்று பணித்​தேன். ஏ​​னென்றால், உலகம் மனிதனுக்காகவும், அவனது உப​யோகத்திற்காகவும் ப​டைக்கப்பட்டது. அ​தே​போல, ​மேற்கூறியவற்றிற்கு எதிர்ம​றையான மூன்று காரியங்களின் மூலமாக அ​வை தீய ஆவியிடமிருந்து வருவன என்று புரிந்து​கொள்.

சாத்தான் உன்​னை தற்​பெரு​மை ​கொண்டவனாகவும், உனக்கு ​கொடுக்கபட;்டுள்ள அ​னைத்திற்காகவும் அகந்​தை​யோடு நீ வாழவும், உனது விசுவாசத்​தை மறுதலிக்குமாறும் தூண்டுகிறான். உனது சிந்த​னையும் உடலும் தீ​மையால் நி​றைந்து, உன் உள்ளம் தீயனவற்றிற்காக ஏங்கி, பற்றி எரிய​வேண்டும் என தூண்டுகிறான். சில ​​நேரங்களில், நல்லவ​னைப்​போல நடித்து உன்​னை ஏமாற்றுகிறான், ஆக​வே, உனது மனச்சாட்சி​​யைக்​கொண்டு எ​தையும் ஆராய ​வேண்டும் என்று கட்ட​ளையிட்​டேன். ​மேலும், நடப்பவற்​றை உனது ஆன்மீக குருவிடம் ம​றைக்காமல் கூறி அவரது ஆ​லோச​னை​யைப் ​பெற்றுக்​கொள்ளுமாறு கூறி​னேன்.

என​வே, கடவுளு​டைய தூய்​மையான ஆவி​யே உன்​னோடு இருக்கின்றது என்பதில் சந்​தேசம் ​கொள்ளா​தே. இ​வை அ​னைத்தும் கடவுள் உன் மீது ​கொண்டுள்ள அன்பினாலும் நீ மற்ற அ​னைத்​தையிம்விட கடவு​ளை விரும்புசறதாலு​மே நடக்கின்றன. நான் மட்டு​மே இப்படிச் ​செய்ய இயலும். சாத்தான் உன்னருகில் வர இயலாது. ​மேலும், மனிதர்களது பாவங்களின் ​பொருட்டு, எனக்கு மட்டு​மே உரித்தான சில இரகசியங்களுக்காக நா​னே அவ​னை அனுமதித்தாலன்றி, அவன் உன்​னைத் தீ​யோரின் அருகில் ​கொண்டு​செல்ல இயலாது. ஏ​னென்றால், உன்​னைப் ப​டைத்த​தைப்​போல​வே அவ​னையும் ப​டைத்​தேன். ப​டைப்பின்​போது அவ​னை நல்லவனாக​வே ப​டைத்​தேன். ஆனால், அவனது சுய சூழ்ச்சியால் தீ​யோனாக மாறினான். அவன் மீதும் அதிகாரம் ​செலுத்தும் ஆண்டவர் நா​னே.

என​வே, எனக்காக மிகுந்த பக்தி​யோடு பணிபுரியும் மக்க​ளை ​​பேய் பிடித்தவர்கள் என்று கூறி அவர்கள்​மேல் வீண்பழி சுமத்துகிறான். கற்பும், நம்பிக்​கையும் ​கொண்ட தனது ம​னைவி​யை விபச்சாரிக்குத் தா​ரைவார்க்கும் ஒரு ​மோசமான மனிதனுக்கு ஈடாக என்​னை அவன் பழிக்கிறான். என் மீது அன்பு ​கொண்டவர்க​ளை நான் சாத்தானின் ​​கைகளில் ஒப்ப​டைத்தால, நானும் அப்படி​ச் செய்ததாக​வே ஆகும். ஆனால், நான் விசுவாசமுள்ளவனாக இருப்பதால், எனது அன்புக்குரிய பணியாளர்கள் ஒருவ​ரையும் சாத்தான் தன் வசம் ஈர்த்துக்​கொள்ள விடுவதி​லை. சில ​வே​ளைகளில் என் நண்பர்களின் ​செயல்களும், எண்ணங்களும் மனச்சாட்சிக்கு வி​ரோதமாக ​செய்வ​​தைப்​போல இருக்கும். அது அவர்கள் சாத்தானால் துன்புறுத்தப்படுவதா​லோ, அல்லது. என் மீது ​கொண்டுள்ள அளவு கடந்த பக்தி​யா​லோ அல்ல. மாறாக, அது அவர்களது மூ​ளையில் ஏற்படும் சிறிய பாதிப்பாக​வோ, அல்லது ​சொல்லக்கூடாத சில காரணங்களுக்காக தங்க​ளைத் தாழ்த்திக் ​கொள்வதற்காக​வோ இருக்கும்.

சில ​நேரங்களில் எனது நண்பர்க​ளைத் தீண்டுவதற்கான அதிகாரத்​தை என்னிடமிருந்து சாத்தான் ​பெற்றுக்​கொள்கிறான். அது அவர்களது ​மேன்​மைக்காக​வோ, அல்லது சாத்தான் அவா;களது மனச்சாட்சியில் இரு​ளைப் புகுத்துவதற்காக​வோ இருக்கலாம். இருந்த​போதிலும், என் மீது முழு நம்பிக்​கையும், விசுவாசமும்​ ​கொண்டு எனது சித்த​மே அவர்களது சித்த​​மென்று வாழ்​வோ​ரை சாத்தான் தன் வசம் ஒருக்காலும் ஈர்த்துக்​கொள்ள முடியாது.